கீழடி அகழ்வாராய்ச்சியில் நீள சுவர் கண்டுபிடிப்பு
கீழடி அகழ்வாராய்ச்சியில் நீள சுவர் கண்டுபிடிக்கப்பட்டது.
திருப்புவனம்,
திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 5 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் முடிவு பெற்று தற்சமயம் 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.
கடந்த மாதம் 19-ந் தேதியிலிருந்து பணிகள் தொடங்கப்பட்டு, கீழடி நீதி அம்மாள் நிலத்தில் குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 பகுதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீழடியில் ஏற்கனவே குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சிறிய பானைகளும், செங்கற்களால் ஆன சிறிய சுவரும் கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது தொடர்ந்து பணிகள் செய்யும் போது சிறிய சுவரின் தொடர்ச்சியாக நீள சுவர் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சுவர் பழைய சுவருடன் இணைந்தே உள்ளது.
தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணியின் போது இன்னும் பல அரிய பொருட்கள் கிடைக்கக் கூடும் என்று தெரிய வருகிறது. கொந்தகையில் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. அகரம் பகுதியிலும் சுத்தம் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

Related Tags :
Next Story