நெம்மேலி கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு பணி திருவான்மியூர், மயிலாப்பூரில் 15 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தம் சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு
நெம்மேலி கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக வருகிற 17-ந் தேதியில் இருந்து 15 நாட்கள் மூடப்படுவதால் அந்த நாட்களில் திருவான்மியூர், அடையாறு, மயிலாப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்து உள்ளது.
சென்னை,
நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தினசரி 100 மில்லியன் லிட்டர் திறன்கொண்ட கடல்நீர் குடிநீராக மாற்றப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் தானியங்கி வடிகட்டி அலகுகள் பொருத்தும் பணிகள் வருகிற 17-ந் தேதி (செவ்வாய்கிழமை) காலை 6 மணி முதல் ஏப்ரல் 1-ந் தேதி காலை 6 மணி வரை தொடர்ந்து 15 நாட்கள் நடைபெற உள்ளது.
இதனால் திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, அடையாறு, வேளச்சேரி, பெசன்ட்நகர், மயிலாப்பூர், மந்தைவெளி, சோழிங்கநல்லூர், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை போன்ற பகுதிகளுக்கு வருகிற 17-ந் தேதியில் இருந்து ஏப்ரல் 1-ந் தேதி வரை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும். எனினும் மேற்குறிப்பிட்டுள்ள பகுதிகளுக்கு குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாற்று ஏற்பாடுகள்
இதனால் பொதுமக்கள் முன்எச்சரிக்கையாக தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறும், சிக்கனமாக பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மாற்று ஏற்பாடாக அவசர தேவைக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ளலாம்.
மயிலாப்பூர், மந்தைவெளி 9-வது பகுதி பொறியாளர் (செல்போன் எண் 81449- 30909), அடையாறு, வேளச்சேரி, பெசன்ட்நகர், திருவான்மியூர் 13-வது பகுதி பொறியாளர் (எண் 81449-30913), கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி 14-வது பகுதி பொறியாளர் (எண் 81449-30914), ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர் 15-வது பகுதி பொறியாளர் (எண் 81449-30915) ஆகிய அலுவலர்களை செல்போன்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
மேற்கண்ட தகவலை சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story