வீரவநல்லூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து பொதுக்கூட்டம்
வீரவநல்லூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சேரன்மாதேவி,
வீரவநல்லூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பொதுக்கூட்டம்
சேரன்மாதேவி அருகே உள்ள வீரவநல்லூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மகளிர் அணி விமன்ஸ் இந்தியா மூவ்மெண்ட், நேஷனல் விமன்ஸ் பிரண்ட் அமைப்பு ஆகியவை சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரியும், டெல்லியில் நடந்த கலவரத்தை கண்டித்தும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. விமன்ஸ் இந்தியா மூவ்மெண்ட் அம்பை வட்டார பொறுப்பாளர் ஜன்னத் நிஷா தலைமை தாங்கினார். வீரவநல்லூர் நகர பொறுப்பாளர் ஷாஜிதா சாகுல் வரவேற்றார்.
கோஷங்கள்
கூட்டத்தில் நெல்லை மாவட்ட தலைவர் மும்தாஜ் ஆலிமா, துணைத்தலைவர் அனீஸ்பாத்திமா, செயலாளர் மஹ்முதா ரினோசா, மாவட்ட பொருளாளர் பாத்திமா, நேஷனல் விமன்ஸ் பிரண்ட் நெல்லை மாவட்ட செயலாளர் ஷப்னம் ஆலிமா, அம்பை வட்டார பொறுப்பாளர் பீர்பாத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஆல் இந்தியா இமாம் கவுன்சில் மாநில தலைவர் சம்சுல் இக்பால்தாவூதி, நேஷனல் விமன்ஸ் பிரண்ட் மாநில பொருளாளர் மஹதியா, விமன்ஸ் இந்தியா மூவ்மெண்ட் மாநில செயலாளர் பாத்திமா கனி, சிவில் உரிமை கழக துணைத்தலைவர் சரசுவதி, வீராங்கனை இயக்க தலைவர் பாத்திமா பாபு ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் ஷம்சாத், ஷஹினா, கன்சூல், அஹமதால் உள்பட பலர் கலந்து கொண்டனர். நேஷனல் விமன்ஸ் பிரண்ட் வீரவநல்லூர் நகர பொறுப்பாளர் செய்தூன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story