மாவட்ட செய்திகள்

மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் கிரிக்கெட் போட்டி: வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகீதாஜீவன் எம்.எல்.ஏ. வழங்கினார் + "||" + MK Stalin's Birthday Cricket Contest: Prize for winning teams

மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் கிரிக்கெட் போட்டி: வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகீதாஜீவன் எம்.எல்.ஏ. வழங்கினார்

மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் கிரிக்கெட் போட்டி: வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகீதாஜீவன் எம்.எல்.ஏ. வழங்கினார்
கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. பரிசு வழங்கி பாராட்டினார்.
தூத்துக்குடி,

தூத்துக்குடியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நடந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. பரிசு வழங்கி பாராட்டினார்.

கிரிக்கெட் போட்டி 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி எட்டயபுரம் ரோட்டில் உள்ள மைதானத்தில் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 32 அணிகள் கலந்து கொண்டன. இந்த போட்டிகளை தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் தொடங்கி வைத்தார். இதில் நேற்று இறுதி போட்டிகள் நடந்தன. இதில் சிறப்பாக விளையாடிய மாதாநகர் அணி முதல் பரிசை வென்று மண்டல அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது.

பரிசளிப்பு விழா 

நேற்று மாலையில் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கான பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் தலைமை தாங்கினார். உட்கட்சி தேர்தல் பொறுப்பாளர் பாலவாக்கம் சோமு, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாதாநகர் அணிக்கு கோப்பை பரிசு வழங்கி பாட்டினார்.

நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், துணை அமைப்பாளர் பிரதீப், மாநகர இளைஞரணி ஆனந்த் கேப்ரியேல்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம், மாணவரணி துணை அமைப்பாளர் பாலகுருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.