முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைமைஆசிரியர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு


முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைமைஆசிரியர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு
x
தினத்தந்தி 15 March 2020 11:00 PM GMT (Updated: 15 March 2020 5:39 PM GMT)

தலைமை ஆசிரியர்களுக்கு கொரோனா வைரஸ் நோய் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த மாவட்ட அளவிலான அரசு மற்றும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதற்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மதிவாணன் தலைமை தாங்கினார். பெரம்பலூர் கல்வி மாவட்ட அலுவலர் மாரிமீனாள், முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர்கள் சிதம்பரம், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பெரம்பலூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கீதாராணி பேசுகையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருமல், தும்மல் வந்தால் கைக்குட்டை வைத்து பயன்படுத்த வேண்டும். வீட்டில் இருந்தாலும், வெளியே அல்லது பள்ளிக்கு சென்று வந்தாலும் அடிக்கடி சோப்பு அல்லது சோப்பு திரவம் கொண்டு கைகளை நன்கு கழுவ வேண்டும். சளி, இருமல், மூச்சுத்திணறல் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை டாக்டரை அணுக வேண்டும் என்றார்.

தடுக்கும் முறைகள்

மேலும் அவர், கொரோனா வைரஸ் நோய் எப்படி பரவுகிறது, பரவாமல் தடுக்கும் முறைகள், நோய் பற்றிய அறிகுறிகள் உள்ளவர்கள் டாக்டர்களை அணுகி வீடுகளிலிலேயே, அவர்களை தனிமை படுத்துவது போன்ற முறைகள் பற்றி தெளிவாக விளக்கினார். இதில் மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் டாக்டர் சரவணன், மாவட்ட மலேரியா அலுவலர் சுப்ரமணியன், சுகாதாரப்பணிகளின் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) ராஜ்மோகன் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story