மாவட்ட செய்திகள்

மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Because the wife was angry Plaintiff committed suicide by hanging

மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த ஆதனூர் எம்.ஜி.நகர் பகுதியை சேர்ந்தவர் கெமில்டன் (வயது 32), இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் இவருடைய மனைவி இவரிடம் கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.


இதனால் மனமுடைந்த கெமில்டன் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கெமில்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.