மாவட்ட செய்திகள்

வாகன நிறுத்தும் இடமாக மாறிய கிராம நிர்வாக அலுவலகம் புதிய கட்டிடம் கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை + "||" + Turned into a parking space Village Administrative Office New building Public demand

வாகன நிறுத்தும் இடமாக மாறிய கிராம நிர்வாக அலுவலகம் புதிய கட்டிடம் கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை

வாகன நிறுத்தும் இடமாக மாறிய கிராம நிர்வாக அலுவலகம் புதிய கட்டிடம் கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகைபேர் ஊராட்சியில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் மேற்கூரை பெயர்ந்து சேதமடைந்து காணப்படுவதால், வாகன நிறுத்தும் இடமாக மாறியுள்ளது.
பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைபேர் ஊராட்சியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்குட்பட்ட கிராம நிர்வாக அலுவலகம் பஜார் வீதியில் செயல்பட்டுவந்தது.


இந்நிலையில், இந்த அலுவலகத்தில் நாள்தோறும் கிராம நிர்வாக அதிகாரி வந்து இருந்து பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு வகையான பணிகளை மேற்கொண்டு வந்தார்.

இதற்கிடையே இந்த அலுவலகத்தின் மேற்கூரை பெயர்ந்து கட்டிடம் சிதிலமடைந்து காணப்பட்டது. இதனால் இந்த அலுவலகத்தை தொடர்ந்து பயன்படுத்த முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி சம்பந்தப்பட்ட உயர்அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் கட்டிடம் சீரமைக்கப்பட வில்லை என்று தெரிகிறது.

இதனால் இந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை கிராம நிர்வாக அதிகாரி பூட்டிவிட்டார்.

இதனால் இந்த கட்டிடம் தற்போது வாகனங்களை நிறுத்தும் (பார்க்கிங்) இடமாக மாறிவிட்டது. மேலும் கிராம நிர்வாக அதிகாரி தற்போது அங்குள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு வந்து பொதுமக்கள் பணியை முடித்து கொண்டு செல்கிறார். எனவே, பழுதடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.