மாவட்ட செய்திகள்

கொரோனா, பறவை காய்ச்சல் பீதி : கோவையில் மீன் விலை உயர்வு - வஞ்சிரம் கிலோ ரூ.1000-க்கு விற்பனை + "||" + Corona, bird flu panic: Price increases in the expression of fish - Cheat sale for Rs.1000 per kg

கொரோனா, பறவை காய்ச்சல் பீதி : கோவையில் மீன் விலை உயர்வு - வஞ்சிரம் கிலோ ரூ.1000-க்கு விற்பனை

கொரோனா, பறவை காய்ச்சல் பீதி : கோவையில் மீன் விலை உயர்வு - வஞ்சிரம் கிலோ ரூ.1000-க்கு விற்பனை
கொரோனா, பறவை காய்ச்சல் பீதியால் கோவையில் மீன் விலை உயர்ந்துள்ளது. வஞ்சிரம் கிலோ ரூ.1000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோவை,

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுஒருபுறம் இருக்க கேரளாவில் பறவை காய்ச்சல் தாக்கத்தால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.

பறவை காய்ச்சல் மற்றும் கொரோனா வைரஸ் ஆகியவை கோழி இறைச்சி மூலம் பரவுவதாக சமூகவலைத்தளங்களில் வதந்தி பரப்பப் பட்டு வருகிறது. இதனால் கோழி இறைச்சி வாங்க தயக்கம் காட்டி வரு கின்றனர். மீன், ஆட்டிறைச்சியை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் கோவையில் மீன், ஆட்டிறைச்சி விலை உயர்ந்து உள்ளன.

இதன்படி கடந்த வாரம் கிலோ ரூ.700 முதல் ரூ.800 -க்கு விற்ற வஞ்சிரம் மீன் (பெரியது) தற்போது ரூ.900 முதல் ரூ.1,000-க்கும் விற்பனையானது. மற்ற மீன்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு (பழைய விலை அடைப்புக்குறிக்குள்):-

மத்தி ரூ.120 (ரூ.100), இறால் ரூ.450 (ரூ.350), நெத்திலி ரூ.220 (ரூ.180), பாறை ரூ.350 (ரூ.250), ஊளி ரூ.300 (ரூ.200), வாவல் ரூ.650 (ரூ.450)-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இது குறித்து மீன் வியாபாரிகள் கூறும் போது, இந்த மாத தொடக்கத் தில் வரத்து அதிகமாக இருந்ததால் மீன்விலை கொஞ்சம் குறைந்தது. தற்போது கொரோனா, கேரளாவில் தோன்றிய பறவை காய்ச்சல் காரணமாக மீன்வகைகளை அதிகம் வாங்கி செல்கின்றனர். மீன் நுகர்வு அதிகரித்ததால் மீன்களின் விலை உயர்ந்து உள்ளது என்றனர்.

இது போல் கொரோனா, பறவை காய்ச்சல் பீதி காரணமாக கோவையில் ஆட்டிறைச்சி விலையும் உயர்ந்து உள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.640 முதல் ரூ.660 வரை விற்பனை செய்யப்பட்ட ஆட்டிறைச்சி தற்போது ரூ.700 முதல் ரூ.720 வரை விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு சீனாவில் 3 நிமிடங்கள் மவுன அஞ்சலி
கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்காக சீனாவில் இன்று 3 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
2. கொரோனாவை ஒழிக்க ஒன்றுபடுவோம்: ‘நாளை இரவு 9 மணிக்கு வீட்டு வாசலில் ஒளிவிளக்கு ஏந்தி நில்லுங்கள்’ - நாட்டு மக்களுக்கு மோடி வேண்டுகோள்
கொரோனாவை ஒழிக்க ஒன்றுபடும் வகையில், மக்கள் அனைவரும் நாளை இரவு 9 மணிக்கு தங்கள் வீட்டு வாசலில் ஒளிவிளக்கு ஏந்தி நிற்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
3. கொரோனா பயத்தால் போராட்டம் எதிரொலி: மேலூர் சிறை கைதிகள் மத்திய சிறைக்கு மாற்றம்
மேலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டிருந்தவர்கள் கொரோனா பயத்தால் போராட்டம் நடத்தியதால் அவர்கள் அனைவரும் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.
4. கொரோனா வைரசுக்கு ஐரோப்பாவில் பலியான 95 சதவீதம் பேர் 60 வயதை கடந்தவர்கள் - உலக சுகாதார அமைப்பு தகவல்
கொரோனா வைரசுக்கு ஐரோப்பாவில் பலியான 95 சதவீதம் பேர் 60 வயதை கடந்தவர்கள் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
5. ‘கொரோனா சாவு பற்றிய உண்மையை சீனா மறைக்கிறது’ - அமெரிக்கா குற்றச்சாட்டு
கொரோனா சாவு பற்றிய உண்மையை சீனா மறைப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.