10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் டிரைவர் கைது
கோவையில் 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கோவை,
கோவை ராமநாதபுரம் கணேசபுரத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 35). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு, 10-ம் வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவரின் தந்தைக்கு பழக்கமானார். இதையடுத்து அவர், அந்த மாணவியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார்.
சம்பவத்தன்று மாணவி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு சென்ற அருண்குமார், அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதற்கு அந்த மாணவி எதிர்ப்பு தெரிவித்தார். உடனே அவர், இதுகுறித்து வேறு யாரிடமும் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன அந்த மாணவி யாரிடமும் சொல்லவில்லை. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அருண்குமார் மாணவிக்கு பலமுறை பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. அவரது தொல்லை அதிகரித்ததால் ஆத்திரம் அடைந்த பள்ளி மாணவி இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
அவர்கள் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தனர். பின்னர் இந்த வழக்கு ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இது குறித்து இன்ஸ்பெக்டர் உமா விசாரணை நடத்தி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவர் அருண்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தார்.
Related Tags :
Next Story