கண்மாயில் மூழ்கி மாணவன் சாவு


கண்மாயில் மூழ்கி மாணவன் சாவு
x
தினத்தந்தி 16 March 2020 4:00 AM IST (Updated: 16 March 2020 4:37 AM IST)
t-max-icont-min-icon

நண்பர்களுடன் குளித்தபோது கண்மாயில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தான். இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

மதுரை,

மதுரை கூடல்நகர் அஞ்சல் நகரை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மகன் வசீகரன்(வயது 14). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். நண்பர்களுடன் ஆனையூர் கண்மாய்க்கு குளிப்பதற்காக சென்றான்.

அப்போது ஆழமான பகுதியில் குளித்து கொண்டிருந்த வசீகரன், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தான்.

இதுகுறித்து தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் மூழ்கிய மாணவனின் உடலை மீட்டு பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story