மாவட்ட செய்திகள்

காலை உணவு திட்டத்தை கைவிட கோரி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Demanding to abandon the breakfast program Nutrition Staff Demonstration

காலை உணவு திட்டத்தை கைவிட கோரி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

காலை உணவு திட்டத்தை கைவிட கோரி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
காலை உணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட கோரி சிவகங்கையில் சத்துணவு ஊழியர்கள் ஆா்ப்பாட்டம் செய்தனர்.
சிவகங்கை,

தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் சார்பில் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரத்து 500 வழங்க வேண்டும். பணிக்கொடையை ரூ.5 லட்சமாக உயா்த்தி வழங்கவேண்டும்.

தமிழகம் முழுவதும் காலி பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் உள்ள ஒன்றிய அலுவலகம் முன்பாக ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றியத் தலைவா் நடராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் குமரேசன், மாவட்ட பொருளாளா் பானுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

இதில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் பாண்டியம்மாள், மாவட்ட துணைச் செயலா் முருகேசன் உள்பட பலர் கலந்துகொண்டனா்.