குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெறும் தர்ணா போராட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு


குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெறும் தர்ணா போராட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு
x
தினத்தந்தி 16 March 2020 4:00 AM IST (Updated: 16 March 2020 6:06 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திருப்பூர், 

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். தேசிய மக்கள் பதிவேடு உள்ளிட்ட திட்டங்களை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது. திருப்பூரிலும் கருப்பு பலூன் பறக்க விடும் போராட்டம், சாலை மறியல், ரெயில் மறியல் என்பது உள்பட போராட்டங்கள் இஸ்லாமியர்கள் சார்பில் நடந்து வருகிறது.

இதில் செல்லாண்டியம்மன் படித்துறை பகுதியில் திருப்பூர் இளைஞர் கூட்டமைப்பு மற்றும் குடியுரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு ஆகியவை சார்பில் 30-வது நாளாக தொடர் தர்ணா போராட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கைகளை நன்றாக கழுவ வேண்டும். இருமல், சளி இருந்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்ல கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தர்ணா போராட்டத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்று வருகிறார்கள். இவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க எவ்வாறு முகக்கவசம் அணிய வேண்டும். கைகளை எவ்வாறு கழுவ வேண்டும் என்பது குறித்து நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Next Story