அந்தியூரில் இலவச கண் சிகிச்சை முகாம் - அமைச்சர் கே.சி.கருப்பணன் பங்கேற்பு
அந்தியூரில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் அமைச்சர் கே.சி.கருப்பணன் பங்கேற்று தொடங்கி வைத்தார்.
அந்தியூர்,
அந்தியூர் கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஈரோடு ஜீவன் ஜோதி டிரஸ்ட் மற்றும் அரசன் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது. முகாமுக்கு அந்தியூர் இ.எம்.ஆர். ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து கண் பரிசோதனை செய்து கொண்டார். தொடர்ந்து பொதுமக்கள் கண் பரிசோதனை செய்தனர். அவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதில் கண் அறுவை சிகிச்சை செய்யவேண்டிய நபர்கள் தேர்வு செய்யப்பட்டு ஈரோடு அழைத்து செல்லப்பட்டனர்.
நிகழ்ச்சியில் அந்தியூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வளர்மதி தேவராஜ், மாவட்ட கவுன்சிலர் சண்முகவேல், முன்னாள் பேரூராட்சி தலைவர் டி.எஸ்.மீனாட்சிசுந்தரம், பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் குருராஜ், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் செல்வராஜ் பால்சாமி, கிருஷ்ணன் மற்றும் அந்தியூர், தவிட்டுப்பாளையம், புதுப்பாளையம், சந்தியாபாளையம், அத்தாணி, ஒலகடம் உள்பட பல்வேறு பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story