மாவட்ட செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பொதுக்கூட்டம் + "||" + Public Meeting Against Citizenship Amendment Act

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பொதுக்கூட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பொதுக்கூட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து எஸ்.புதூர் அருகே கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.
எஸ்.புதூர்,

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கரிசல்பட்டி முஸ்லிம் ஜமாத் கமிட்டி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் எஸ்.புதூர் அருேக உள்ள கரிசல்பட்டியில் நடைபெற்றது. ஜமாத் கமிட்டி தலைவர் காதர்ஷா தலைமை தாங்கினார். ஜமாத்தார்கள் முன்னிலை வகித்தனர். கரிசல்பட்டி ஜும்மா பள்ளிவாசல் தலைமை இமாம் சேக்தாவுது, எஸ்.டி.பி.ஐ. சிவகங்கை மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் ரசாக் வர வேற்றனர்.

முன்னதாக பள்ளிவாசலில் இருந்து பொதுக்கூட்டம் நடைபெற்ற கலையரங்கம் வரை 250 மீட்டர் நீளம் உள்ள தேசிய கொடியை ஊர்வலமாக எடுத்துச்சென்றனர். அதனை தொடர்ந்து கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் கண்டன பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது.

தொடர்ந்து பெரியகருப்பன் எம்.எல்.ஏ., விடுதலை சிறுத்தை கட்சி மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சிவச்சந்திரன், தமிழ்நாடு என்.சி.எச்.ஆர்.ஓ. பொதுச்செயலாளர் ஷாஜகான், ம.தி.மு.க. மாநில தேர்தல் பணி செயலாளர் மணவை தமிழ் மாணிக்கம், நாம் தமிழர் கட்சி மாநில உழவர் பாசறை செயலாளர் சிவராமன், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக், சி.பி.எம். மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், தமிழர் முன்னணி மாநில பொதுச் செயலாளர் இமயம் சரவணன் ஆகியோர் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி கண்டன உரை நிகழ்த்தினர்.

இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள், ஆண்கள் கலந்து கொண்டனர். திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாத்துரை தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படிருந்தனர். முடிவில் கரிசல்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஷாஜகான் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. குடியுரிமை திருத்த சட்டம் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில்
குடியுரிமை திருத்த சட்டம் எந்தவகையிலும் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது.
2. பா.ஜனதா, இந்து அமைப்புகள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பேரணி
பா.ஜனதா, இந்து அமைப்புகள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக ஊட்டியில் பேரணி நடந்தது.
3. குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து வங்கியில் பணம் எடுக்கும் போராட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து வங்கியில் பணம் எடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
4. குடியுரிமை திருத்த சட்டம், என்.பி.ஆர். குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் - சட்டசபையில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
குடியுரிமை திருத்த சட்டம், என்.பி.ஆர். சட்டம் குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று சட்டசபையில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
5. வண்ணாரப்பேட்டை சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தை ஒத்திவைக்க இஸ்லாமிய தலைவர்கள் கோரிக்கை
சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தை ஒத்திவைக்க பல இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்து உள்ளனர்.