மாவட்ட செய்திகள்

காரைக்குடி, கண்டதேவி பகுதிகளில் மாட்டு வண்டி பந்தயம் + "||" + Karaikudi, Cow car racing in Kandadevi areas

காரைக்குடி, கண்டதேவி பகுதிகளில் மாட்டு வண்டி பந்தயம்

காரைக்குடி, கண்டதேவி பகுதிகளில் மாட்டு வண்டி பந்தயம்
காரைக்குடி, கண்டதேவி பகுதிகளில் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
காரைக்குடி,

காரைக்குடி அருகே மித்ராவயல் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் மது எடுப்பு விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் மித்ராவயல்-சாக்கோட்டை சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 49 வண்டிகள் கலந்துகொண்டு பெரிய மாட்டு வண்டி பந்தயம், நடுமாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என 3 பிரிவாக நடைபெற்றது.

முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 10 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை தினையாகுடி சிவா வண்டியும், 2-வது பரிசை வல்லாளப்பட்டி கக்காத்தாள் வண்டியும், 3-வது பரிசை விராமதி சந்திரன் வண்டியும், 4-வது பரிசை கோ.வேலங்குடி சோலையன் வண்டியும் பெற்றன. பின்னர் நடைபெற்ற நடுமாட்டு வண்டி பந்தயத்தில் 12 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை பீர்க்கலைக்காடு பைசல் மற்றும் மாவூர் ரிதன்யாமோகன் வண்டியும், 2-வது பரிசை அமராவதிபுதூர் வேலுகிருஷ்ணன் வண்டியும், 3-வது பரிசை உடப்பன்பட்டி கணேஷ் வண்டியும், 4-வது பரிசை ஏத்தநாடு அம்பாள் வண்டியும் பெற்றன.

இறுதியாக நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 25 வண்டிகள் கலந்துகொண்டு இரு பிரிவாக நடைபெற்றன. முதல் பிரிவில் முதல் பரிசை புதுப்பட்டி கரைமேல் அய்யனார் வண்டியும், 2-வது பரிசை நல்லாங்குடி சசிக்குமார் வண்டியும், 3-வது பரிசை மித்திரங்குடி சுப்பையா மற்றும் அத்தானிகணேசன் வண்டியும், 4-வது பரிசை பேராவூரணி கழனிவாசல் நீலகண்ட விநாயகர் வண்டியும் பெற்றன. பின்னர் நடைபெற்ற 2-வது பிரிவில் முதல் பரிசை ஓடித்திக்காடு பெரியகருப்பன் வண்டியும், 2-வது பரிசை வேட்டணிவயல் அக்சயா வண்டியும், 3-வது பரிசை கிடாரிப்பட்டி பாண்டியராஜன் வண்டியும், 4-வது பரிசை கண்டதேவி மருதுபிரதர்ஸ் வண்டியும் பெற்றன.

இதேபோல் தேவகோட்டை அருகே கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ் வரர், தேரடி கருப்பர் கோவில் மாசிமக திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் கோவில் நான்கு ரத வீதிகளில் நடைபெற்றது. இதில் மொத்தம் 22 வண்டிகள் கலந்துகொண்டு பெரிய மாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என 2 பிரிவாக நடைபெற்றது.

முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 11 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை தினையாகுடி சிவா வண்டி மற்றும் காரைக்குடி கருப்பணன் வண்டியும், 2-வது பரிசை கண்டதேவி மருதுபிரதர்ஸ் வண்டியும், 3-வது பரிசை தானாவயல் வெங்கடாசலம் வண்டியும், 4-வது பரிசை மருங்கூர் முகமது வண்டியும், 5-வது பரிசை விராமதி சந்திரன் வண்டியும் பெற்றன.

பின்னர் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 11 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை தேவகோட்டை மாணிக்கம் செட்டியார் வண்டியும், 2-வது பரிசை மருங்கூர் நாச்சியார் வண்டியும், 3-வது பரிசை கண்டதேவி மருதுபிரதர்ஸ் வண்டியும், 4-வது பரிசை வெளிமுத்தி வாகினி வண்டியும், 5-வது பரிசை ஆலவிளாம்பட்டி செல்வம் வண்டியும் பெற்றன. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

தொடர்புடைய செய்திகள்

1. காரைக்குடி, சிவகங்கை பகுதியில் மாட்டு வண்டி பந்தயம்
காரைக்குடி மற்றும் சிவகங்கை பகுதியில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.