சேலம் கோட்டத்திற்குட்பட்ட 6 ரெயில் நிலையங்களில் மருத்துவ உதவி மையம்
சேலம் ரெயில்வே கோட்டத்திற்குட்பட்ட 6 ரெயில் நிலையங்களில் மருத்துவ உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
சேலம்,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, சேலம் ரெயில்வே கோட்டத்திற்குட்பட்ட சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், கரூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
சேலம் வழியாக செல்லும் அனைத்து ரெயில்களிலும் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சேலம் ரெயில்வே கோட்டத்திற்குட்பட்ட 6 ரெயில் நிலையங்களிலும் மருத்துவ உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
பரிசோதனை
இந்த மையத்தில் ஒரு டாக்டர் மற்றும் 3 பணியாளர்கள் பணியில் இருப்பார்கள். ரெயிலில் வரும் பயணிகளில் யாருக்காவது காய்ச்சல், இருமல், சளி இருந்தால் மருத்துவ உதவி மையத்துக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம். அப்போது யாருக்காவது கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தால் அவர்கள் உடனடியாக அந்தந்த மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுவர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.
சேலம் ஜங்சன் நுழைவு வாயிலில் மருத்துவ உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ரெயிலில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் ரெயில் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

Related Tags :
Next Story