மாவட்ட செய்திகள்

கர்நாடகத்தில் திட்டமிட்டபடி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெறுமா? பொது கல்வித்துறை கமிஷனர் பரபரப்பு தகவல் + "||" + As planned in Karnataka SSLC Exam?

கர்நாடகத்தில் திட்டமிட்டபடி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெறுமா? பொது கல்வித்துறை கமிஷனர் பரபரப்பு தகவல்

கர்நாடகத்தில் திட்டமிட்டபடி  எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெறுமா?  பொது கல்வித்துறை கமிஷனர் பரபரப்பு தகவல்
கர்நாடகத்தில் திட்டமிட்டபடி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெறுமா? என்ற கேள்விக்கு பொது கல்வித்துறை கமிஷனர் பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.
பெங்களூரு, 

கர்நாடகத்தில் இதுவரை 6 பேருக்கு கொரோனா விஷக்கிருமி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கலபுரகியை சேர்ந்த 76 வயது முதியவர் மரணம் அடைந்துள்ளார். இதையடுத்து கர்நாடகத்தில் 1 முதல் 6-ம் வகுப்பு வரை தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது. 7-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று மாநில அரசு கடந்த வாரம் அறிவித்தது. இந்த நிலையில் பொது கல்வித்துறை கமிஷனர் ஜெகதீஷ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பள்ளிகளுக்கு அனுமதி

கர்நாடகத்தில் கொரோனா விஷக்கிருமி பரவி வருவதால் 1-ம் வகுப்பு முதல் 6-ம் வகுப்பு வரை தேர்வு செய்யப்பட்டு, முதல் மற்றும் 2-ம் பருவ தேர்வு அடிப்படையில் தேர்ச்சி குறித்து முடிவு எடுத்துக்ெகாள்ள பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 7-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை தேர்வுகள் வருகிற 31-ந் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் தேர்வு நடத்த வாய்ப்பு உள்ளது. அதனால் குழந்தைகள் தற்போது விடப்பட்டுள்ள விடுமுறையை நன்றாக பயன்படுத்தி படிக்க வேண்டும். தேர்வு ரத்தாகிவிடும் என்று யாரும் கருதக்கூடாது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு வருகிற 27-ந் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆலோசித்து முடிவு

இந்த தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும். ஒருவேளை கொரோனா விஷக்கிருமி, மேலும் பரவினால் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ஒத்திவைப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் தேர்வு நடத்துவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். ஆனால் மாணவ-மாணவிகள் தொடர்ந்து நன்றாக படிக்க வேண்டும்.

இவ்வாறு ஜெகதீஷ் கூறினார்.