நாகை கலெக்டர் அலுவலகத்துக்கு மீனவ கிராமத்தினர் மனு கொடுக்க திரண்டு வந்ததால் பரபரப்பு


நாகை கலெக்டர் அலுவலகத்துக்கு மீனவ கிராமத்தினர் மனு கொடுக்க திரண்டு வந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 17 March 2020 5:00 AM IST (Updated: 17 March 2020 2:29 AM IST)
t-max-icont-min-icon

சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி வழங்க கோரி மீனவ கிராம மக்கள் நாகை கலெக்டர் அலுவலத்துக்கு திரண்டு வந்தனர்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக பழையாறு முதல் செருதூர் வரை உள்ள 54 கிராமத்தை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வந்தனர். அப்போது அங்கு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

அனுமதி

பின்னர் அவர்கள் போலீசாரிடம் கூறுகையில், அரசு சுருக்குமடி வலைகளை பயன்படுத்துவதற்கு தடைவிதிக்காமல், சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்ய அனுமதி பெற்று தர வேண்டும் என தெரிவித்தனர். நாகை கலெக்டர் அலுவலகத்துக்கு மீனவ கிரமத்தினர் ஒன்று திரண்டு வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story