குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு: வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க முஸ்லிம்கள் திரண்டதால் பரபரப்பு
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் அருகே அடியக்கமங்கலத்தில் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முஸ்லிம்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர்,
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த சட்டத்திற்கு தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரியும். தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடத்தி வருகின்றனர்.
இதில் திருவாரூர் மாவட்டத்தில் அடியக்கமங்கலம், கூத்தாநல்லூர், முத்துப்பேட்டை போன்ற பகுதிகளில் தொடர் காத்திருப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
வங்கி முன்பு திரண்ட முஸ்லிம்கள்
இதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்டத்தில் முஸ்லிம்கள் தங்களது வங்கி கணக்கில் உள்ள பணத்தை முழுவதுமாக எடுத்து அரசுக்கு தங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் நூதன போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி திருவாரூர் அருகே அடியக்கமங்கலத்தில் முஸ்லிம்கள் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக சென்று கடைவீதி அருகே உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு திரண்டனர். பின்னர் வங்கியில் தங்கள் கணக்கில் வைத்திருந்த பணத்தை எடுக்க முயன்றனர். ஆனால் வங்கியில் போதிய பணம் இல்லாததால் மதியம் வருமாறு வங்கி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பரபரப்பு
இதனையடுத்து கூட்டுறவு வங்கிக்கு சென்று தங்களது பணத்தை எடுக்க முயன்றனர். அப்போது உயர் அதிகாரி வந்தவுடன் அனைவருக்கும் பணம் தரப்படும், அதுவரை காத்திருக்க வேண்டும் என வங்கி நிர்வாகம் தெரிவித்தது. முஸ்லிம்கள் வங்கி கணக்கில் பணம் எடுக்க திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story