மாவட்ட செய்திகள்

செங்கோட்டை அருகே கார்- மோட்டார்சைக்கிள் மோதல்; தொழிலாளி சாவு டிரைவர் கைது + "||" + Car-motorcycle collision near Sengottai; Worker's death driver arrested

செங்கோட்டை அருகே கார்- மோட்டார்சைக்கிள் மோதல்; தொழிலாளி சாவு டிரைவர் கைது

செங்கோட்டை அருகே கார்- மோட்டார்சைக்கிள் மோதல்; தொழிலாளி சாவு டிரைவர் கைது
செங்கோட்டை அருகே கார்- மோட்டார்சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந் தார். இந்த விபத்து தொடர்பாக கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
செங்கோட்டை,

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள லாலாகுடியிருப்பு கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 43). இவர் செங்கோட்டை அருகில் பிரானூர் பார்டரில் உள்ள தனியார் மரம் அறுவை ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.


செங்கோட்டை அருகே உள்ள கட்டளைகுடிருப்பு மெயின் ரோட்டில் வளைவில் திரும்பும்போது, கேரளாவில் இருந்து செங்கோட்டையை நோக்கி வந்த கார் ஒன்று அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் முத்துகுமார் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.

பரிதாப சாவு

ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே முத்துக்குமார் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து புளியரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி காரை ஓட்டி வந்த செங்கோட்டையை சேர்ந்த கிரு‌‌ஷ்ணன் (53) என்பவரை கைது செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. கடையநல்லூரில் தொழிலாளி கொலையில் 5 பேர் கைது உடலை வாங்க மறுத்து போராட்டம்
கடையநல்லூரில் தொழிலாளி கொலையில் 5 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் அவரது உடலை வாங்க மறுத்து நேற்று போராட்டம் நடைபெற்றது.
2. ஆந்திராவில் கிருமிநாசினி திரவம் குடித்து 13 பேர் பரிதாப சாவு
ஆந்திராவில் போதைக்காக கிருமிநாசினி திரவம் குடித்த 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
3. கடையநல்லூரில் பயங்கரம்: தொழிலாளி வெட்டிக்கொலை
கடையநல்லூரில் தொழிலாளி அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4. வண்டலூர் பூங்காவில் சிறுத்தைப்புலி சாவு
ஊட்டியில் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்ட சிறுத்தைப்புலி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.
5. அம்பை அருகே கோர்ட்டு ஊழியர் மர்ம சாவு உடலை புதைக்க முயன்றதால் பரபரப்பு
அம்பை அருகே கோர்ட்டு ஊழியர் மர்மமான முறையில் இறந்தார். அவரது உடலை புதைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.