மாவட்ட செய்திகள்

நெல்லை-தென்காசி மாவட்டங்களில் 5-ம் வகுப்பு வரை விடுமுறை: 2,916 பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன சினிமா தியேட்டர்களும் இயங்கவில்லை + "||" + Nellai In the Tenkasi districts Holidays up to 5th grade No movie theaters are running

நெல்லை-தென்காசி மாவட்டங்களில் 5-ம் வகுப்பு வரை விடுமுறை: 2,916 பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன சினிமா தியேட்டர்களும் இயங்கவில்லை

நெல்லை-தென்காசி மாவட்டங்களில் 5-ம் வகுப்பு வரை விடுமுறை: 2,916 பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன சினிமா தியேட்டர்களும் இயங்கவில்லை
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 5-ம் வகுப்பு வரை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால், 2 ஆயிரத்து 916 பள்ளிக்கூடங்கள் நேற்று மூடப்பட்டன. சினிமா தியேட்டர்களும் இயங்கவில்லை.
நெல்லை,

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. டாக்டர்கள், ரெயில்வே ஊழியர்கள், போலீஸ்காரர்கள் முககவசம் அணிந்து பணியாற்றி வருகிறார்கள். நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரி டாக்டர்கள் நேற்று முககவசம் அணிந்து பணியாற்றினர்.


கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் 5-ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் வருகிற 31-ந் தேதி வரை விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி நெல்லை, தென்காசி மாவட்டங்களின் 5-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களும் நேற்று மூடப்பட்டன. நெல்லை மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், தனியார் தொடக்க பள்ளிகள், நர்சரி பள்ளிகள் என மொத்தம் 1,812 பள்ளிக்கூடங்கள் உள்ளன. அவை அனைத்தும் மூடப்பட்டன. ஆனால் ஆசிரியர்கள் வழக்கம் போல் பணிக்கு வந்தார்கள். அதுபோல் தென்காசி மாவட்டத்தில் 1,104 பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மொத்தம் 2 ஆயிரத்து 916 பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. சில பள்ளிக்கூடங்களுக்கு மாணவ-மாணவிகள் வந்தனர். அவர்களை ஆசிரியர்கள் திருப்பி அனுப்பினர். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வழக்கம் போல் வந்து தேர்வு எழுதினர். பள்ளிக்கூடத்துக்கு வந்த சில ஆசிரியர்கள் அருகே உள்ள தெருக்களில் கொரோனா வைரஸ் பற்றிய துண்டு பிரசுரம் வினியோகம் செய்தனர்.

நெல்லை மாநகர பகுதியில் 6 சினிமா தியேட்டர்களும், புறநகர் பகுதியில் 2 சினிமா தியேட்டர்களும் உள்ளன. அந்த தியேட்டர்கள் அனைத்தும் நேற்று மூடப்பட்டன. தியேட்டர்களுக்கு வெளியே காட்சிகள் கிடையாது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருந்தது. சில ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வந்து ஏமாற்றம் அடைந்தனர்.

இதுகுறித்து நெல்லை மாவட்ட தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சினிமா தியேட்டர்களை மூட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி நாங்கள் தியேட்டர்களை இயக்கவில்லை. அரசு அனுமதி பெற்ற பிறகு தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்படும்“ என்றார்.

நெல்லையப்பர் கோவில், சாலைகுமாரசாமி கோவில், பாளையங்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோவில், சிவன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. பல கோவில்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

தினமும் நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் ஏராளமான மக்கள் வந்து செல்வார்கள். கொரோனா வைரஸ் காரணமாக நெல்லை மாவட்ட அறிவியல் மையம் நேற்று மூடப்பட்டது. இதனால் ஏராளமான மக்கள் வந்து திருப்பி சென்றனர். பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரியில் ஊழியர்கள் முககவசம் அணிந்து பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்கள். அதுபோல் பெட்ரோல் பல்க்கில் ஊழியர்கள் முககவசம் அணிந்து வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் முழு ஊரடங்கு: மக்கள் வீடுகளில் முடங்கினர் கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின
நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் முழு ஊரடங்கால் நேற்று மக்கள் வீடுகளில் முடங்கினர். கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
2. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.
3. நெல்லை, தூத்துக்குடியில் புதிதாக 698 பேருக்கு கொரோனா: தென்காசியில் 64 பேர் பாதிப்பு
நெல்லை, தூத்துக்குடியில் நேற்று புதிதாக 698 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 2 பெண்கள் உள்பட 7 பேர் பலியானார்கள்.
4. நெல்லை, திருவாரூர், மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
நெல்லை, திருவாரூர், மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
5. நெல்லையில் போலீஸ் வாகனம் மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம்: உதவி ஆய்வாளர் ஐயப்பன் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு
நெல்லை கீழநத்தம் பகுதியை சேர்ந்த இளைஞர் சண்முகையா போலீஸ் வாகனம் மோதி உயிரிழந்த சம்பவத்தில் உதவி ஆய்வாளர் ஐயப்பன் மீது 2 பிரிவுகளில் வழக்கு செய்யப்பட்டுள்ளது.