2 மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்


2 மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 March 2020 5:30 AM IST (Updated: 17 March 2020 3:56 AM IST)
t-max-icont-min-icon

2 மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் துப்புரவு தொழிலாளர்கள் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இவர்கள் வீடு, வீடாக சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை போன்றவற்றை பிரித்து வாங்கி வருகிறார்கள். இது தவிர ஒப்பந்த அடிப் படையிலும் துப்புரவு தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இவர்களுக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் அனைவரும் நேற்று தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள கலைக்கூடம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் உடனடியாக சம்பளம் வழங்கக்கோரி கோ‌‌ஷங்கள் எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பளம் வழங்க வேண்டும்

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘கடந்த 2 மாதமாக எங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் நாங்கள் குடும்பம் நடத்துவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. சம்பளம் வழங்கக்கோரி பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உடனடியாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றனர்.

Next Story