மாவட்ட செய்திகள்

கடன் தொல்லையால் விபரீதம்: ஓட்டல் தொழிலாளி கழுத்தை அறுத்து தற்கொலை + "||" + Credit Suisse Adultery: Hotel worker commits suicide by cutting his neck

கடன் தொல்லையால் விபரீதம்: ஓட்டல் தொழிலாளி கழுத்தை அறுத்து தற்கொலை

கடன் தொல்லையால் விபரீதம்: ஓட்டல் தொழிலாளி கழுத்தை அறுத்து தற்கொலை
கடன் தொல்லையால் விபரீதமாக ஓட்டல் தொழிலாளி கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.
காரைக்கால்,

காரைக்கால் சுண்ணாம்புக்கார வீதியைச் சேர்ந்தவர் ஆரிப் (வயது41). ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

இந்தநிலையில் பல பேரிடம் ஆரிப் கடன் வாங்கி செலவு செய்ததாக கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பித் தரும்படி கேட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த ஆரிப் கடந்த சில தினங்களாக யாரிடமும் சரிவர பேசாமல் இருந்து வந்தார்.


பரபரப்பு

இந்தநிலையில் ஆரிப் நேற்று காலை வழக்கம் போல் ஓட்டலில் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென வெங்காயம் வெட்டும் கத்தியால் தனக்கு தானே கழுத்தை அறுத்துக்கொண்டார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். இதைப்பார்த்ததும் ஓட்டலில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஆரிப் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நிரவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடன் தொல்லையால் விபரீதமாக ஓட்டல் தொழிலாளி கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. திருவள்ளூர் அருகே, தொழிலாளி வெட்டிக்கொலை
திருவள்ளூர் அருகே வீட்டின் முன்பு தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
2. சென்னையில் பயங்கரம் பாலியல் துன்புறுத்தல் செய்து 10 வயது சிறுமி கொலை 2-வது மாடியில் இருந்து கீழே வீசிய தொழிலாளி கைது
10 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்து 2-வது மாடியில் இருந்து கீழே வீசி கொலை செய்த கட்டிடத்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
3. பாலியல் துன்புறுத்தல் செய்து 10 வயது சிறுமி கொலை - தொழிலாளி கைது
10 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்து 2-வது மாடியில் இருந்து கீழே வீசி கொலை செய்த கட்டிடத்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
4. பிளஸ்-2 மாணவி தற்கொலை இயற்பியல் தேர்வு கடினமாக இருந்ததால் விபரீத முடிவு
குழித்துறை அருகே இயற்பியல் தேர்வு கடினமாக இருந்ததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5. கடிதம் எழுதி வைத்துவிட்டு வனக்காவலர் விஷம் குடித்து சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக மனைவி கைது
சாக்கோட்டை அருகே வனக்காவலர் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது முதல் மனைவியை போலீசார் கைது செய்தனர்.