கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: களக்காடு தலையணை மூடல்


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: களக்காடு தலையணை மூடல்
x
தினத்தந்தி 17 March 2020 11:00 PM GMT (Updated: 17 March 2020 12:20 PM GMT)

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக களக்காடு தலையணை மூடப்பட்டது.

களக்காடு, 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக களக்காடு தலையணை மூடப்பட்டது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் 

களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள தலையணைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். விடுமுறை நாட்களில் இந்த பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து நீராடி செல்வர். தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக களக்காடு தலையணைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

நுழைவு கேட் மூடப்பட்டது 

இதையொட்டி தலையணையின் நுழைவு கேட் மூடப்பட்டது. இதனால் நேற்று அந்த அணைப்பகுதிக்கு சென்ற சில சுற்றுலா பயணிகள் திரும்பி சென்றனர். மேலும் களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் இளங்கோ ஆலோசனைப்படி வனச்சரகர் புகழேந்தி தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், திருக்குறுங்குடி நம்பி கோவில் மலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. வரும் 31–ந் தேதி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story