மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: ஒருநபர் ஆணைய 20–வது கட்ட விசாரணை தொடங்கியது + "||" + Thoothukudi shooting incident: One person authority The trial began on the 20th

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: ஒருநபர் ஆணைய 20–வது கட்ட விசாரணை தொடங்கியது

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: ஒருநபர் ஆணைய 20–வது கட்ட விசாரணை தொடங்கியது
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணையத்தின் 20–வது கட்ட விசாரணை நேற்று தொடங்கியது.
தூத்துக்குடி, 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணையத்தின் 20–வது கட்ட விசாரணை நேற்று தொடங்கியது.

துப்பாக்கி சூடு 

தூத்துக்குடியில் கடந்த 2018–ம் ஆண்டு மே மாதம் 22–ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு, தடியடி மற்றும் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் பலியானார்கள். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணைய அதிகாரி மாதம் தோறும் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி, ஏற்கனவே 19 கட்ட விசாரணை நடத்தப்பட்டு, கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், போராட்டத்தில் பங்கேற்றவர்கள், போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய நிர்வாகிகள், வக்கீல்கள், பத்திரிகையாளர்கள் உள்பட 459 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. 634 ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

20–வது கட்ட விசாரணை 

இந்த நிலையில் 20–வது கட்ட விசாரணை தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் தலைமையில் நேற்று தொடங்கியது. இந்த விசாரணைக்காக மொத்தம் 44 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. மாவட்ட தொழில் மைய அதிகாரிகள் மற்றும் அபிடவிட் தாக்கல் செய்தவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

நேற்று மட்டும் 10 பேர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இதில் 6 பேர் ஆஜராகி வாக்குமூலம் பதிவு செய்தனர். வருகிற 20–ந் தேதி வரை தொடர்ந்து விசாரணை நடக்கிறது.