சென்னை போலீஸ் நிலையங்களில் கொரோனா வைரஸ் சோதனை


சென்னை போலீஸ் நிலையங்களில்    கொரோனா வைரஸ் சோதனை
x
தினத்தந்தி 18 March 2020 3:30 AM IST (Updated: 17 March 2020 10:35 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் போலீஸ் நிலையங்களிலும், போலீஸ் குடியிருப்புகளிலும் கொரோனா வைரஸ் சோதனை நடத்த போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, 

சென்னையில் போலீஸ் நிலையங்களிலும், போலீஸ் குடியிருப்புகளிலும் கொரோனா வைரஸ் சோதனை நடத்த வேண்டும் என்றும், அது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்திலும் ஈடுபட வேண்டும் என்றும் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

இதையொட்டி சென்னையில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பணியாற்றும் போலீசாருக்கு கொரோனா வைரஸ் சோதனை நடைபெற்றது. சென்னை எழும்பூர் போலீஸ் நிலையத்தில், இன்ஸ்பெக்டர் சேட்டு மற்றும் போலீசார் கொரோனா வைரஸ் சோதனை செய்து கொண்டனர்.

எழும்பூரில் உள்ள போலீஸ் குடியிருப்பு, புதுப்பேட்டை நரியங்காடு போலீஸ் குடியிருப்பிலும் கொரோனா வைரஸ் சோதனை நடத்தப்பட்டது. டாக்டர்கள் மூலம், அது பற்றிய விழிப்புணர்வு பிரசாரமும் நடந்தப்பட்டது.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், புகார் கொடுக்க வரும் பொது மக்கள் மற்றும் கமிஷனர் அலுவலகத்துக்கு வரும் போலீசார் உள்பட அனைவருக்கும் கொரோனா வைரஸ் சோதனை மற்றும் விழிப்புணர்வு நடக்கிறது.

Next Story