மாவட்ட செய்திகள்

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை: சுற்றுலாவாசிகளுக்கு 31-ந் தேதி வரை அனுமதி கிடையாது ராஜ் பவன் அறிவிப்பு + "||" + Tourists are not allowed until 31st Raj Bhavan Announcement

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை: சுற்றுலாவாசிகளுக்கு 31-ந் தேதி வரை அனுமதி கிடையாது ராஜ் பவன் அறிவிப்பு

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை:  சுற்றுலாவாசிகளுக்கு 31-ந் தேதி வரை அனுமதி கிடையாது  ராஜ் பவன் அறிவிப்பு
சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனுக்கு வருகிற 31-ந் தேதி வரை சுற்றுலா வாசிகள் செல்வதற்கு அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, 

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு இம்மாதம் 31-ந் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், தியேட்டர்களை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனுக்கு வருகிற 31-ந் தேதி வரை சுற்றுலா வாசிகள் செல்வதற்கு அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாவாசிகளுக்கான இந்த சிரமத்துக்கு வருந்துவதாகவும் ராஜ் பவன் தெரிவித்துள்ளது.