மாவட்ட செய்திகள்

கொரோனா வைரஸ் தொடர்பான ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது + "||" + Corona virus consultation meeting Held at the headquarters

கொரோனா வைரஸ் தொடர்பான ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது

கொரோனா வைரஸ் தொடர்பான ஆலோசனை கூட்டம்  தலைமைச் செயலகத்தில் நடந்தது
கொரோனா வைரஸ் தொடர்பான ஆலோசனை கூட்டம் தேசிய பேரிடர் மேலாண்மை கூடுதல் செயலாளர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடந்தது.
சென்னை, 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தேசிய பேரிடர் மேலாண்மை கூடுதல் செயலாளர் வி.திரு புகழ் தலைமை தாங்கினார். வருவாய்த்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், உயர் கல்வித்துறையின் முதன்மை செயலாளர் அபூர்வா, பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கு தமிழகத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு தொடர் நடவடிக்கைகள், எடுக்கப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.