மாவட்ட செய்திகள்

ஈரோட்டில் சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவர் கைது + "||" + Sexual harassment of girl in Erode; Old man arrested

ஈரோட்டில் சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவர் கைது

ஈரோட்டில் சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவர் கைது
ஈரோட்டில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு,

ஈரோடு கொல்லம்பாளையத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 70). அந்த பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியிடம் அவர் நன்றாக பழகி வந்தார். இதனால் அந்த தம்பதியின் 9 வயது மகள், மாரியப்பன் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார். அந்த சிறுமி 3-ம் வகுப்பு படித்து வருகிறாள்.


பள்ளிக்கூடம் விடுமுறையில் பெற்றோர் வேலைக்கு சென்றபோது, சிறுமியை மாரியப்பனின் வீட்டில் விட்டு செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். இந்தநிலையில் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் நேற்று முன்தினம் சிறுமியை அவளது பெற்றோர் மாரியப்பனிடம் விட்டு வேலைக்கு சென்றுள்ளனர்.

போக்சோ சட்டம்

மாலையில் அவர்கள் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தனர். அப்போது சிறுமி சோர்வடைந்த நிலையில் காணப்பட்டாள். இதனால் அவளிடம் பெற்றோர் கேட்டபோது, மாரியப்பன் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக சிறுமி அழுது கொண்டே கூறினாள்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை நேற்று கைது செய்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மாவட்டம் முழுவதும் 358 வழக்குகள் பதிவு; 412 பேர் கைது
மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமலில் உள்ள 144 தடை உத்தரவை மீறியதாக 358 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 412 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2. வெனிசூலா அதிபரை கைது செய்ய அமெரிக்கா தீவிரம்: தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.112 கோடி சன்மானம் அறிவிப்பு
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக கூறி வெனிசூலா அதிபரை கைது செய்ய அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. அவரது கைது தொடர்பாக தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.112 கோடி சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
3. பழனி அருகே யானை மிதித்து முதியவர் பலி உடலை டோலி கட்டி தூக்கி வந்த பரிதாபம்
பழனி அருகே முதியவரை யானை மிதித்து கொன்றது. அவரது உடலை டோலி கட்டி வனத்துறையினர் தூக்கி வந்தனர்.
4. சென்னையில் பயங்கரம் பாலியல் துன்புறுத்தல் செய்து 10 வயது சிறுமி கொலை 2-வது மாடியில் இருந்து கீழே வீசிய தொழிலாளி கைது
10 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்து 2-வது மாடியில் இருந்து கீழே வீசி கொலை செய்த கட்டிடத்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
5. காரமடை அருகே பெள்ளாதி கூட்டுறவு சங்கத்தில் ரூ.4 கோடியே 80 லட்சம் மோசடி முன்னாள் தலைவர், செயலாளர் கைது
காரமடை அருகே உள்ள பெள்ளாதி கூட்டுறவு சங்கத்தில் ரூ.4 கோடியே 80 லட்சம் மோசடி செய்யப்பட்டது. இது தொடர்பாக முன்னாள் தலைவர், செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.