கொரோனா தடுப்பு நடவடிக்கை: அரசு பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்


கொரோனா தடுப்பு நடவடிக்கை: அரசு பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 18 March 2020 5:00 AM IST (Updated: 18 March 2020 3:02 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

மதுரை,

மதுரை அரசு போக்குவரத்து கழக பஸ்களில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக அனைத்து அரசு பஸ்களிலும் மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்தில் உள்ள 18 போக்குவரத்து பணிமனை வளாகம் சுத்தம் செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

பெரியார் பஸ் நிலையம், எம்.ஜி.ஆர். பஸ் நிலையம், ஆரப்பாளையம் பஸ் நிலையங்களிலும் மற்றும் பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் கொரோனா வைரஸ் பரவுவது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கிருமி நாசினி

பஸ் நிலையத்தில் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் பிளாட்பாரம், இருக்கைகள், கைப்பிடி போன்ற இடங்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. பணிமனைகளில் உள்ள ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் தங்கும் ஓய்வறைகள், கழிப்பறைகள், பஸ் நிறுத்தும் இடங்கள் என அனைத்து இடங்களிலும் நோய் தடுப்பு மருந்து தெளிக்கப்படுகிறது. அலுவலகத்திற்குள் நுழையும் போது கைகளை சுத்தம் செய்ய தேவையான பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய் தடுப்பு பணிகளை மதுரை மண்டல பொது மேலாளர் ராஜேஸ்வரன், துணை மேலாளர்(வணிகம்) ரவிக்குமார், உதவி மேலாளர் (சிவில்) ரமேஷ், உதவி பொறியாளர்(சிவில்) தமிழ்செல்வன் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story