மாவட்ட செய்திகள்

படப்பை பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை + "||" + Public demand to set sail at bus stop

படப்பை பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

படப்பை பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
படப்பை பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க பொதுமக்ககள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படப்பை, 

காஞ்சீபுரம் மாவட்டத்தில் முக்கிய சாலையாக வண்டலூர் - வாலாஜாபாத் 6 வழி சாலை அமைந்துள்ளது. இந்த 6 வழி சாலைகளில் படப்பை பகுதியில் சாலைப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சாலை வழியாக, காஞ்சீபுரம், வேலூர், தாம்பரம், சென்னை மற்றும் பல்வேறு இடங்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் நின்று செல்கிறது.

இந்த பஸ் நிறுத்தத்தில் நாள்தோறும் ஏராளமானோர் பஸ்களுக்காக காத்திருக்கின்றனர். அங்கு நிழற்குடை இல்லாததால் கொளுத்தும் வெயிலிலும், மழையிலும் காத்திருக்கின்றனர். பஸ்சுக்காக நிற்கும்போது ஒதுங்குவதற்கு கூட இடம் இல்லாமல் பொதுமக்கள், முதியோர்கள், மாணவர்கள், மற்றும் கைக் குழந்தையுடன் இருக்கும் பெண்கள் உள்பட அனைவரும் அவதிக்குள்ளாகின்றனர்.

பொதுமக்கள் கோரிக்கை

இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில்:-

இந்த பஸ் நிறுத்தத்தில் பல ஆண்டுகளாக பொதுமக்கள் நிற்பதற்கு நிழற்குடை இல்லாமல் இருப்பதால் சாலையோரத்தில் வெயிலிலும், மழையிலும் நின்று பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே படப்பை பஸ் நிறுத்தத்தில் உடனடியாக நிழற்குடை அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தொடர்புடைய செய்திகள்

1. பொன்னேரி அருகே கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
பொன்னேரி அடுத்த காட்டாவூர் கிராமத்தில் மராட்டிய மாமன்னர் சத்ரபதி சிவாஜி கட்டி குளித்த கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2. நிறுத்தப்பட்ட அரசு பஸ்களை மீண்டும் இயக்க பொதுமக்கள் கோரிக்கை
நிறுத்தப்பட்ட அரசு பஸ்களை மீண்டும் இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.