இருங்காட்டு கோட்டை ஊராட்சியில் மழைநீர் கால்வாயில் தேங்கும் கழிவுநீர் தொற்று நோய் பரவும் அபாயம்


இருங்காட்டு கோட்டை ஊராட்சியில்   மழைநீர் கால்வாயில் தேங்கும் கழிவுநீர்   தொற்று நோய் பரவும் அபாயம்
x
தினத்தந்தி 17 March 2020 10:45 PM GMT (Updated: 17 March 2020 9:52 PM GMT)

இருங்காட்டு கோட்டை ஊராட்சியில் மழைநீர் கால்வாயில் தேங்கும் கழிவுநீரால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

ஸ்ரீபெரும்புதூர், 

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் இருங்காட்டு கோட்டை ஊராட்சியில் நூற்று கணக்கில் தொழில் நிறுவங்கள் உள்ளன. ஊராட்சிக்கு லட்ச கணக்கில் வருவாய் வருகிறது. ஊராட்சி சார்பில் பல லட்சம் ரூபாய் செலவில் ஊராட்சி முழுவதும் மழை நீர் வடிகால் கால்வாய் அமைக்கப்பட்டது.

இந்தபகுதியில் சிலர் தங்களது குடியிருப்பில் இருந்து கழிவுநீரை வெளியேற்றி குடிநீர் கால்வாயில் கலந்து விடுகின்றனர். சிலர் கால்வாய் நடுவில் ஆங்காங்கே மண்ணை கொட்டி வைத்துள்ளனர்.

தொற்றுநோய் பரவும் அபாயம்

ஒரு சிலர் கால்வாயில் மண்ணை கொட்டி உள்ளனர். இதன் காரணமாக கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் அந்த பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

மேலும் இந்த கால்வாயில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. கழிவுநீர் தேங்கி உள்ளதால் டிரான்ஸ்பார்மர் சேதம் அடையும் நிலையில் உள்ளது.

மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து மழை நீர் கால்வாயை சீரமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story