மாவட்ட செய்திகள்

புகார் கொடுக்க, விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு வருபவர்கள் கை கழுவிவிட்டு வர வேண்டும் + "||" + People who come to the police station for an inquiry must wash their hands

புகார் கொடுக்க, விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு வருபவர்கள் கை கழுவிவிட்டு வர வேண்டும்

புகார் கொடுக்க, விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு வருபவர்கள் கை கழுவிவிட்டு வர வேண்டும்
புகார் கொடுக்க மற்றும் விசாரணைக்காக போலீஸ் நிலையங்களுக்கு வரும் பொதுமக்கள், கை கழுவி விட்டு வர வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உத்தரவிட்டு உள்ளார்.
சின்னசேலம்,

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார் அதன் பேரில் கள்ளக்குறிச்சி காவல் உட்கோட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் விசாரணை மற்றும் புகார் கொடுக்க வருகிறவர்கள், கை கழுவிய பின்னரே போலீஸ் நிலையத்துக்குள் வர வேண்டும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் அறிவுறுத்தி உள்ளார்.


வாளியில் தண்ணீர்

அதன்படி சின்னசேலம் போலீஸ் நிலையத்துக்கு புகார் மற்றும் விசாரணைக்காக வரும் பொதுமக்கள் கை கழுவுவதற்காக, போலீஸ் நிலையத்துக்கு வெளியே நுழைவு வாயிலில் வாளியில் தண்ணீர், ஜக்கு, சோப்பு மற்றும் துண்டு ஆகியவற்றை போலீசார் வைத்து உள்ளனர்.

இதனால் போலீஸ் நிலையத்துக்கு வருகிறவர்கள் கை கழுவிக்கொண்டு உள்ளே செல்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை இன்ஸ்பெக்டர் சுதாகர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுரளி, பிரபாகர் மற்றும் போலீசார் செய்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவிலிருந்து பாதுகாக்க அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வேண்டுகோள்
கொரோனாவில் இருந்து பாதுகாக்க அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
2. கொரோனாவை கட்டுப்படுத்த அமெரிக்கா ரூ.150 லட்சம் கோடி ஒதுக்கியது
அமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்த அமெரிக்கா ரூ.150 லட்சம் கோடி ஒதுக்கி உள்ளது. இதற்கான சட்டத்தில் ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்திட்டார்.
3. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெண்டுல்கர் ரூ.50 லட்சம் நிதியுதவி
கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் தெண்டுல்கர் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கி இருக்கிறார்.
4. கொரோனாவுக்கு எதிராக போராடும் சுகாதார ஊழியர்களுக்கு ஜனாதிபதி பாராட்டு
கொரோனாவுக்கு எதிராக போராடும் சுகாதார ஊழியர்களுக்கு ஜனாதிபதி பாராட்டு தெரிவித்தார்.
5. கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் - எம்.எல்.ஏ. வேண்டுகோள்
கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று சதன் பிரபாகரன் எம்.எல்.ஏ. கேட்டுக் கொண்டார்.