திருப்பத்தூரில் சாலை விரிவாக்க பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றம் - நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை
திருப்பத்தூரில் சாலை விரிவாக்க பணிக்காக ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலை வரை செல்லும் சாலை இரண்டு வழிச்சாலையாக மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டது.
அதைத்தொடர்ந்து சாலை விரிவாக்கப்பணிக்காக திருப்பத்தூர் சின்னக்கடை தெரு முனையில் இருந்து வெங்களாபுரம் வழியாக பசலிகுட்டை வரை உள்ள 7 கிலோ மீட்டர் தூரம் இரண்டு வழிச்சாலையாக மாற்ற அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை சார்பில் அவ்வழியாக உள்ள கடைகள், வீடுகள், கோவில்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
ஆனால் நோட்டீஸ் வழங்கியும் அவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் திரிலோகசந்தர், தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் முருகன் தலைமையில் பொக்லைன் எந்திரங்களை கொண்டு வந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
சாலைகளில் இருபுறமும் இருந்த கொடிக்கம்பம் மற்றும் கடைகளில் கட்டப்பட்ட முன்பக்க கூரைகள் அகற்றப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story