கல்யாண், டோம்பிவிலியில் செயல்படும் 22 ரசாயன ஆலைகளை மூட உத்தரவு மேலும் 200 ஆலைகளுக்கு நோட்டீஸ்
கல்யாண், டோம்பிவிலியில் செயல்படும் 22 ரசாயன ஆலைகளை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் 200 ஆலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அம்பர்நாத்,
முதல்- மந்திரி உத்தவ் தாக்கரே கடந்த மாதம் 10-ந் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கல்யாண் பகுதிக்கு சென்றார். அப்போது, அந்த பகுதியில் உள்ள சாலைகளில் அதிகளவில் ரசாயன கழிவுகள் கொட்டப்பட்டி ருந்தன.
இதையடுத்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, சாலையில் ரசாயன கழிவுகளை கொட்டிய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்தநிலையில் உத்தவ் தாக்கரே சென்று வந்த அடுத்த சில நாட்களில் டோம்பிவிலியில் உள்ள ரசாயன ஆலையில் பயங்கர விபத்து ஏற்பட்டது.
22 ஆலைகளை மூட உத்தரவு
இதையடுத்து கல்யாண், டோம்பிவிலி தொழிற்பேட்டை பகுதிகளில் செயல்படும் ரசாயன ஆலைகளில் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மராட்டிய தொழில் மேம்பாட்டு கழக அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது, பல ஆலைகளில் பெரிய அளவில் விதி மீறல்கள் நடந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் விதி மீறலில் ஈடுபட்ட 22 ஆலைகளை மூட உத்தரவிட்டனர்.
மேலும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் 95 ஆலைகளுக்கும், மாநில தொழில் மேம்பாட்டு கழகம் 105 ஆலைகளுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
Related Tags :
Next Story