மாவட்ட செய்திகள்

வேலூர் மாவட்டத்தில் குறைதீர்வு கூட்டங்கள், மனுநீதிநாள் முகாம்கள் ரத்து - கலெக்டர் சண்முகசுந்தரம் தகவல் + "||" + Grievances in Vellore District, Cancellation of Campaign Day Collector Shanmugasundaram Information

வேலூர் மாவட்டத்தில் குறைதீர்வு கூட்டங்கள், மனுநீதிநாள் முகாம்கள் ரத்து - கலெக்டர் சண்முகசுந்தரம் தகவல்

வேலூர் மாவட்டத்தில் குறைதீர்வு கூட்டங்கள், மனுநீதிநாள் முகாம்கள் ரத்து - கலெக்டர் சண்முகசுந்தரம் தகவல்
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் வேலூர் மாவட்டத்தில் குறைதீர்வு கூட்டங்கள், மனுநீதிநாள் முகாம்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
வேலூர்,

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுவிட்டது.

வேலூர் மாவட்டத்தில் கோவில் திருவிழாக்கள், பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், காளைவிடும் திருவிழா ஆகியவை நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அடிக்கடி கைகளை கழுவ அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், கோவில், மக்கள் கூடும் இடங்களில் பொதுமக்கள் கைகழுவ வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைதோறும் நடக்கும் மக்கள் குறைதீர்வுநாள் கூட்டம், வெள்ளிக்கிழமைதோறும் நடக்கும் அம்மாதிட்ட முகாம்கள், மனுநீதிநாள் முகாம்கள், விவசாயிகள் குறைதீர்வுநாள் கூட்டங்கள் அடுத்த மாதம் (ஏப்ரல்) 15-ந் தேதிவரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கலெக்டர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா சம்பந்தமாக பொதுமக்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. 144 தடை உத்தரவை மீறிய 7 பேரின் வாகனம், ஓட்டுனர் உரிமம் நிரந்தரமாக ரத்து - கலெக்டர் அதிரடி நடவடிக்கை
144 தடை உத்தரவை மீறி வெளியே வாகனங்களை ஓட்டியதால் 7 பேரின் வாகனம், ஓட்டுனர் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டது.
2. இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தால் வாகன, ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் - கலெக்டர் எச்சரிக்கை
தேவையில்லாமல் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தால் வாகன, ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். குறித்து மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
3. வெளிநாடுகளில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு திரும்பிய 95 குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வர தடை - கலெக்டர் தகவல்
வெளிநாடுகளில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு திரும்பிய 95 நபர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வர தடைவிதிக்கப்பட்டுள்ளது, என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
4. கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்காத தனியார் மருத்துவமனைக்கு ‘சீல்’ வைக்கப்படும் - கலெக்டர் எச்சரிக்கை
கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்காத தனியார் மருத்துவமனைக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்தார்.
5. வெளிநாடு, பிற மாநிலத்தவர்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் - விடுதி உரிமையாளர்களுக்கு கலெக்டர் உத்தரவு
வேலூர் மாவட்டத்தில் விடுதிகளில் தங்கியுள்ள வெளிநாடு, பிற மாநிலத்தவர்கள் விவரங்களை கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-