மாவட்ட செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து தஞ்சை வந்த 200 பேர் தொடர்ந்து கண்காணிப்பு கலெக்டர் கோவிந்தராவ் பேட்டி + "||" + Over 200 refugees from overseas were interviewed by Govindarao, the watchdog collector

வெளிநாடுகளில் இருந்து தஞ்சை வந்த 200 பேர் தொடர்ந்து கண்காணிப்பு கலெக்டர் கோவிந்தராவ் பேட்டி

வெளிநாடுகளில் இருந்து தஞ்சை வந்த 200 பேர் தொடர்ந்து கண்காணிப்பு கலெக்டர் கோவிந்தராவ் பேட்டி
தஞ்சை மாவட்ட எல்லையில் நுழையும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் வெளிநாடுகளில் இருந்து தஞ்சை வந்த 200 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று கலெக்டர் கோவிந்தராவ் கூறினார்.
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் புதுக்குடி ஊராட்சி திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் கொரோனா முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதுக்குடி வாகன சோதனைச்சாவடி மையம் அருகில் சுகாதாரத்துறை சார்பில் முகாம் அமைக்கப்பட்டு, வெளியூரிலிருந்து பஸ், கார், லாரி, இருசக்கர வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் வருபவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


மேலும், தஞ்சை மாவட்டத்திற்குள் நுழையும் வாகனங்கள் மீது சுகாதாரத்துறை சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு கொரோனா நோய் தொற்று குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, போக்குவரத்து துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ளும் இப்பணிகளை கலெக்டர் கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலெக்டர் பேட்டி

பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் உத்தரவுபடி தஞ்சை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வெளி மாவட்டங்களிலிருந்து மாவட்டத்திற்குள் நுழையும் 8 இடங்களில் சோதனைச்சாவடி முகாம்கள் அமைக்கப்பட்டு, மாவட்டத்திற்குள் வருபவர்கள் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர்.

தஞ்சை ரெயில் நிலையம், கும்பகோணம் ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை கொரோனா நோய்தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. பொதுமக்கள் அத்தியாவசிய தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் வெளியில் செல்லாமல் இருப்பதற்காகவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தவிர்க்க வேண்டும்

எனவே, சுற்றுலாத்தலங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அரசின் வழிகாட்டுதலை பின்பற்றுவதன் மூலம், கொரோனா நோய்தொற்று ஏற்படுவதை எளிமையாக தவிர்க்க முடியும். தஞ்சை பெரிய கோவில் வருகிற 31-ந்தேதி வரை மூடப்படவுள்ளது. பூஜைகள் தொடர்ந்து நடைபெறும். பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனுமதி மட்டும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து தஞ்சை மாவட்டத்திற்கு வந்த சுமார் 200 பேர் விமான நிலையத்தில் பரிசோதிக்கப்பட்டிருந்தாலும், தொடர்ந்து சுகாதாரத்துறை மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் குமுதாலிங்கராஜ், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ராணி, துணை இயக்குனர் டாக்டர் ரவீந்திரன், வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி, திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகோபால், மாவட்ட கொள்ளைநோய் தடுப்பு அலுவலர் டாக்டர் ஆடலரசி, ராசாமிராசுதார் அரசு மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் உ‌ஷாதேவி, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ரவிச்சந்திரன், கார்த்திகேயன் மற்றும் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், போலீசார் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் என்னென்ன? - மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் விளக்கம்
கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் என்னென்ன? என்பது குறித்து மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் சங்குமணி விளக்கம் அளித்தார்.
2. கொரோனா பாதிப்பை தொடர்ந்து ஊரடங்கு: எதிர்க்கட்சி தலைவர்களுடன் மோடி 8-ந் தேதி ஆலோசனை
கொரோனா பாதிப்பை தொடர்ந்து நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் வருகிற 8-ந் தேதி பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.
3. கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு சீனாவில் 3 நிமிடங்கள் மவுன அஞ்சலி
கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்காக சீனாவில் இன்று 3 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
4. கொரோனாவை ஒழிக்க ஒன்றுபடுவோம்: ‘நாளை இரவு 9 மணிக்கு வீட்டு வாசலில் ஒளிவிளக்கு ஏந்தி நில்லுங்கள்’ - நாட்டு மக்களுக்கு மோடி வேண்டுகோள்
கொரோனாவை ஒழிக்க ஒன்றுபடும் வகையில், மக்கள் அனைவரும் நாளை இரவு 9 மணிக்கு தங்கள் வீட்டு வாசலில் ஒளிவிளக்கு ஏந்தி நிற்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
5. கொரோனா பயத்தால் போராட்டம் எதிரொலி: மேலூர் சிறை கைதிகள் மத்திய சிறைக்கு மாற்றம்
மேலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டிருந்தவர்கள் கொரோனா பயத்தால் போராட்டம் நடத்தியதால் அவர்கள் அனைவரும் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.