மாவட்ட செய்திகள்

நிலப்பிரச்சினையில் உணவில் வி‌‌ஷம் கலந்து 3 பேரை கொன்ற விவசாயிக்கு 3 ஆயுள் தண்டனை + "||" + A farmer who kills three people in a land dispute has been sentenced to life imprisonment

நிலப்பிரச்சினையில் உணவில் வி‌‌ஷம் கலந்து 3 பேரை கொன்ற விவசாயிக்கு 3 ஆயுள் தண்டனை

நிலப்பிரச்சினையில் உணவில் வி‌‌ஷம் கலந்து 3 பேரை கொன்ற விவசாயிக்கு 3 ஆயுள் தண்டனை
ராயக்கோட்டை அருகே நிலப்பிரச்சினையில் உணவில் வி‌‌ஷம் கலந்து 3 பேரை கொன்ற விவசாயிக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
ராயக்கோட்டை,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள நெல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 46). விவசாயி. இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த உறவினர் ஒருவருக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்து வந்தது. இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் கடந்த 3-10-2014 அன்று முருகன் அந்த உறவினரின் வீட்டிற்கு சென்று உணவில் அரளி விதையை கலந்து விட்டு வந்தார்.


பின்னர் வி‌‌ஷம் கலந்த உணவை சாப்பிட்ட மற்றொரு பக்கத்து வீட்டை சேர்ந்த முனியப்பன் (96), ஜீவானந்தம் (7), பூஜா(4) ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து, ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில், நீதிபதி அசோகன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, முருகனுக்கு 3 ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 3,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கில், அரசு தரப்பில் வக்கீல் வேலாயுதம் வாதாடினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொத்தனாரை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை: சிதம்பரம் கோர்ட்டில் தீர்ப்பு
சிதம்பரம் அருகே கொத்தனாரை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிதம்பரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
2. தொழிலாளியை சுட்டுக்கொன்ற செம்மரக் கடத்தல்காரருக்கு ஆயுள் தண்டனை
வனத்துறையினரிடம் காட்டிக் கொடுப்பதாக மிரட்டிய கூலித்தொழிலாளியை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த செம்மரக்கடத்தல்காரருக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
3. 3 பேர் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டவர்: நகைக்காக பெண்ணை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
பரமத்தி அருகே நகைக்காக பெண்ணை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இவர் ஏற்கனவே 3 பேர் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டவர் ஆவார்.
4. சொத்து தகராறில் தம்பியை கொன்றவர் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை
சொத்து தகராறில் தம்பியை கொலை செய்தவருக்கும், அவரது மகனுக்கும் சிவகங்கை கோர்ட்டு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது.
5. ராணுவ வீரர் உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய வழக்கில், தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - தேனி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
முன்னாள் ராணுவ வீரர் மற்றும் அவருடைய மனைவி, தாய் ஆகியோரை அரிவாளால் வெட்டிய தொழிலாளிக்கு தேனி மகளிர் கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.