மாவட்ட செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு: கிரு‌‌ஷ்ணகிரியில் முஸ்லிம்கள் சிறை நிரப்பும் போராட்டம் + "||" + Opposition to the Citizenship Amendment Act: Muslims in Krishnagiri

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு: கிரு‌‌ஷ்ணகிரியில் முஸ்லிம்கள் சிறை நிரப்பும் போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு: கிரு‌‌ஷ்ணகிரியில் முஸ்லிம்கள் சிறை நிரப்பும் போராட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிரு‌‌ஷ்ணகிரியில் முஸ்லிம்கள் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிரு‌‌ஷ்ணகிரி,

கிரு‌‌ஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டம் நடந்தது.


இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சித்திக் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சிராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் சலாமத், நியாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பேச்சாளர் இலியாஸ் கண்டனவுரையாற்றினார்.

கண்டன கோ‌‌ஷங்கள்

இந்த போராட்டத்தின் போது ஏராளமான முஸ்லிம் பெண்களும், குழந்தைகளும் கலந்து கொண்டு தேசிய கொடியை கையில் ஏந்தியபடி மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராகவும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் கண்டன கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் மற்றும் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பயத்தால் போராட்டம் எதிரொலி: மேலூர் சிறை கைதிகள் மத்திய சிறைக்கு மாற்றம்
மேலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டிருந்தவர்கள் கொரோனா பயத்தால் போராட்டம் நடத்தியதால் அவர்கள் அனைவரும் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.
2. கொரோனாவுக்கு எதிராக நடப்பது வாழ்வா? சாவா? போராட்டம் - ஊரடங்கு உத்தரவு பற்றி மோடி உருக்கமான பேச்சு
கொரோனாவுக்கு எதிராக நடப்பது வாழ்வா? சாவா? போராட்டம் என்றும், கொரோனாவை ஒழிக்க நாட்டு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டு உள்ளார்.
3. தி.மு.க. உட்கட்சி தேர்தல் நடத்தாமல் கிளை செயலாளர் நியமனம்: மாவட்ட செயலாளரை கண்டித்து தர்ணா போராட்டம்
மயிலாடுதுறை அருகே தி.மு.க. உட்கட்சி தேர்தல் நடத்தாமல் கிளை செயலாளரை நியமனம் செய்த மாவட்ட செயலாளரை கண்டித்து தர்ணா போராட்டம் நடந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
4. திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கோரி ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் உள்ளிருப்பு போராட்டம்
வெங்கத்தூர் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கோரி ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்
திருவண்ணாமலை அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.