வேன் கதவில் மோதி மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலி டிரைவர் கவனிக்காமல் திறந்ததால் பரிதாபம்
டிரைவர் கவனிக்காமல் திறந்ததால் வேன் கதவில் மோதி மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலியானார்.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே உள்ள நேமலூர் கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி கண்ணன்(வயது 63). இவர் நேற்று மாதர்பாக்கம் பஜார் நோக்கி மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றார். மாதர்பாக்கம் பஜார் அருகே பால் வேன் நின்று கொண்டிருந்தது. எதிரே வந்த மோட்டார் சைக்கிளை கவனிக்காமல் வேன் டிரைவர் இறங்குவதற்காக ஒரு பக்க கதவை திறந்து உள்ளார்.
சாவு
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் கடந்த போது வேனின் கதவு மோட்டார் சைக்கிளில் சென்ற கண்ணன் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் அவர் கீழே விழுந்தார். படுகாயம் அடைந்த கண்ணன் சிகிச்சைக்காக கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story