மதுரை மண்டல தொழிலாளர் இணை கமிஷனர் பொறுப்பேற்பு
மதுரை தொழிலாளர் துணை கமிஷனராக இருந்த சுப்பிரமணியன் பதவி உயர்வு பெற்று இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை,
மதுரை மண்டல தொழிலாளர் இணை கமிஷனராக பணியாற்றி வந்தவர் வேல்முருகன். இவர் சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து, மதுரை தொழிலாளர் துணை கமிஷனராக இருந்த சுப்பிரமணியன் பதவி உயர்வு பெற்று இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் மதுரை, சிவகங்கை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக பொறுப்பேற்றுள்ள இணை கமிஷனருக்கு துறை அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.
Related Tags :
Next Story