காஞ்சீபுரத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு ஆலோசனை
கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி சந்திரனிடம் மாவட்ட கலெக்டர் பொன்னையா ஆலோசனை நடத்தினார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் கோர்ட்டுக்கு வரும் பொதுமக்களுக்கு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மூலம் கைகழுவும் திரவத்தினை கொண்டு கைகளை சுத்தம் செய்து கொள்ள களப்பணியாளர்களை கொண்ட குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கோர்ட்டு வளாகத்தில் அனைத்து இடங்களிலும் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
விழிப்புணர்வு பதாகைகள்...
மேலும் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு பதாகைகள் கோர்ட்டு வளாகத்தில் வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருவதாக ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரி, மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி என்.சுந்தரமூர்த்தி, காஞ்சீபுரம் சப்-கலெக்டர் சரவணன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story