கிருமாம்பாக்கம் பகுதியில் திருமண நிலையம், தங்கும் விடுதி, ஏரிக்கரை கட்டுமானப் பணிகள் அமைச்சர் ஆய்வு


கிருமாம்பாக்கம் பகுதியில் திருமண நிலையம், தங்கும் விடுதி, ஏரிக்கரை கட்டுமானப் பணிகள் அமைச்சர் ஆய்வு
x
தினத்தந்தி 19 March 2020 5:20 AM IST (Updated: 19 March 2020 5:20 AM IST)
t-max-icont-min-icon

கிருமாம்பாக்கம் பகுதியில் நடைபெற்று வரும் திருமண நிலையம், தங்கும் விடுதி, ஏரிக்கரை கட்டுமானப்பணிகளை அமைச்சர் கந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பாகூர்,

புதுச்சேரி அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், கிருமாம்பாக்கம் அருகே பிள்ளையார் குப்பம் போகும் வழியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி திறப்பு விழா காணும் நிலையில் உள்ளது. இதனை அமைச்சர் கந்தசாமி நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.

மேலும் இந்த கட்டிடத்திற்கு தேவையான மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகளை உடனடியாக வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.மேலும் சுற்று சுவர் பாதை அமைத்து பணிகளை விரைந்து முடிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

.அதனைத்தொடர்ந்து கிருமாம்பாக்கம் மெயின் ரோட்டில் உள்ள சாய்பாபா கோவில் அருகே கட்டப்பட்டு வரும் நவீன திருமண நிலையத்தின் கட்டுமானப் பணிகளையும் அமைச்சர் கந்தசாமி பார்வையிட்டார். இந்த கட்டிடத்தை விரைவில் கட்டி முடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அந்தப் பகுதியில் உள்ள அனைத்து குறைகளையும் உடனடியாக நிவர்த்தி செய்து விட்டு விரைவாக பணியை செய்து முடிக்குமாறு அதிகாரிகளை அமைச்சர் கந்தசாமி கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியின் போது இயக்குனர் அசோகன், உதவி இயக்குனர் சுகந்தி, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மனோகரன் மற்றும் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மகாலிங்கம் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

ஏரிக்கரையில் ஆய்வு

அதைத்தொடர்ந்து கிருமாம்பாக்கம் ஏரிக்கரையில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளையும் அமைச்சர் கந்தசாமி ஆய்வு செய்தார். ஏரிக்கரை பகுதியில் கட்டப்பட்டு வரும் உணவக கட்டிடத்தை விரைவாக முடிக்க அதிகாரிகளிடம் உத்தரவிட்டார். இதில் சுற்றுலாத் துறை செயலர் பூர்வா கார்க், சுற்றுலாத் துறை இயக்குனர் முகமது மன்சூர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story