கொரோனா அறிகுறி முத்திரையை கையில் குத்திய அமிதாப்பச்சன்


கொரோனா அறிகுறி முத்திரையை கையில் குத்திய அமிதாப்பச்சன்
x
தினத்தந்தி 19 March 2020 5:30 AM IST (Updated: 19 March 2020 5:30 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் அறிகுறி முத்திரையை அமிதாப் பச்சன் தனது கையில் குத்தி கொண்டார்.

மும்பை, 

கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை பல்வேறு பிரபலங்கள் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் டுவிட்டர் மூலம் தொடர்ந்து கொரோனா விழிப்புணர்வு கருத்துகளை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில்கூட கொரோனா குறித்த கவிதை ஒன்றையும், அதன் விளக்கத்தையும் அவர் வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் கொரோனாவில் இருந்து தப்பிக்கும் வகையில், மக்கள் வீட்டிலேயே தங்கியிருக்குமாறு மராட்டிய அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் கொரோனா அறிகுறி இருப்பவர்கள் வெளியில் நடமாடுவதை தடுக்க அவர்களை வீட்டில் தனிமைப்படுத்தி இடது கையில் அழியாத மை முத்திரையை குத்தி வருகிறது. இந்த முத்திரையை நடிகர் அமிதாப்பச்சனும் குத்திக்கொண்டு உள்ளார். இதை புகைப்படம் எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்து உள்ளார்.

பாராட்டு

மேலும் அதில், ‘எச்சரிக்கையாய் இருங்கள், நோய் தொற்று இருந்தால் தொடர்ந்து தனிமைப்படுத்தி கொள்ளுங்கள்’ என்பது போன்ற வாசகங்களை தெரிவித்து உள்ளார். அமிதாப்பச்சனின் இந்த நடவடிக்கைக்கு மராட்டிய அரசு மற்றும் மும்பை மாநகராட்சி பாராட்டு தெரிவித்து உள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமிதாப்பச்சன் தனது வாராந்திர ரசிகர் சந்திப்பு கூட்டத்தை ரத்து செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story