நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் அவசர கால கட்டுப்பாட்டு அறை கொரோனா குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க ஏற்பாடு
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா குறித்த சந்தேகங்களுக்கு அவசர கால கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது.
நெல்லை,
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா குறித்த சந்தேகங்களுக்கு அவசர கால கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது.
அவசரகால கட்டுப்பாட்டு அறை
நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக பொதுமக்கள் கொரோனா சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அவசர கால கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது.
மேலும், அங்குள்ள கட்டுப்பாட்டு அறையில் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் 24 மணி நேரம் பணியில் உள்ளனர்.
இது குறித்து அவசர கால கட்டுப்பாட்டு அறை அலுவலர்கள் கூறும் போது, “கொரோனா வைரஸ் தொடர்பான பொது மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்படும். நோய் தடுப்பு முறைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்படும். இங்குள்ள அலுவலத்துக்கு பேசுபவர்களின் பெயர், முகவரி உள்ளிட்டவைகள் பதிவு செய்யப்படும். எனவே, பொதுமக்கள் தங்களின் சந்தேகங்களுக்கு 1070 என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.
கட்டணம் இல்லாத தொலைபேசி
மேலும், கொரோனா தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் 1077 என்ற கட்டணம் இல்லாத தொலை பேசி எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story