துப்புரவு பணியாளர்களுக்கு முக கவசங்கள்


துப்புரவு பணியாளர்களுக்கு முக கவசங்கள்
x
தினத்தந்தி 20 March 2020 3:30 AM IST (Updated: 19 March 2020 6:53 PM IST)
t-max-icont-min-icon

இரும்பேடு ஊராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு முக கவசங்கள் வழங்கப்பட்டன.

ஆரணி, 

கொரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக துப்புரவு பணியாளர்களுக்கு முக கவசங்கள் வழங்கப்பட்டது. அதன்படி செய்யாறு சுகாதார நலப்பணிகள் சார்பில் இரும்பேடு ஊராட்சியில் எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சுதா தலைமையில் ஊராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் டேங்க் ஆபரேட்டர்கள் அனைவருக்கும் முககவசம், கையுறைகள் மற்றும் கை கழுவுவதற்கான சோப்பு மற்றும் உபகரணங்களை ஊராட்சி மன்றத் தலைவர் தரணிவெங்கட்ராமன் வழங்கினார்.

அப்போது கிராமம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வினியோகிக்க வேண்டும். கிராமத்தை தூய்மைப்படுத்தி எந்தவித காய்ச்சலும் பரவாமல் தடுக்கும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.


Next Story