ஏரிகளில் நடைபெறும் குடிமராமத்து பணிகள்; அதிகாரிகள் ஆய்வு
கலவை அருகே ஏரிகளில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கலவை,
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 50 உள்வட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்துள்ளது. எனவே நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக ஏரிகள், குளங்கள் போன்ற நீர் நிலைகளை அரசு சார்பில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்திலும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரிகளில் தூர்வாரி, கரைகளை பலப்படுத்தும் பணிகள் நடக்கின்றன. மேலும் ஏரியை ஆழப்படுத்தி, மதகுகள் மற்றும் ஏரிக்கரைகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கலவை அருகே உள்ள மேச்சேரி கிராமம் மேலேரி மற்றும் அரும்பாக்கம், சித்தேரி ஆகிய ஏரிகளில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை நீர்வள ஆதாரத்துறை திருவண்ணாமலை பொன்னையாறு வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ், வேலூர் மேல்பாலாறு வடிநில கோட்ட அதிகாரி சண்முகம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஏரியின் பரப்பளவு அதன் வடிவம், கோடி போகும் இடம் ஆகியவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். ஆய்வின்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story