தொழிற்சாலைகளில் கொரானோ வைரஸ் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ; ஆலோசனை கூட்டத்தில் முடிவு


தொழிற்சாலைகளில் கொரானோ வைரஸ் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ; ஆலோசனை கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 20 March 2020 3:45 AM IST (Updated: 19 March 2020 7:36 PM IST)
t-max-icont-min-icon

அனைத்து தொழிற்சாலைகளில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கி பேசினார். ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத், மாசுகட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் செந்தில்குமார் உள்பட அதிகாரிகள் பலர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களில் யாருக்காவது காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அவருக்கு விடுமுறை அளிக்க வேண்டும். தொழிற்சாலைகளுக்கு வெளிநாட்டில் இருந்து யாரேனும் வந்திருந்தால் அவர்களின் விவரங்களை அறிந்து, அவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

தொழிற்சாலைகளில் கொரோனா வைரஸ் நோய் தடுக்க உடனடியாக ஒரு தனி அலுவலரை நியமித்து அதற்கான தடுப்பு உபகரணங்களை வாங்கி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் வேலை நிமித்தமாக உபயோகிக்கும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும், தொழிலாளர்கள் தினமும் வேலைக்கு வரும் போதும், வேலை முடிந்து செல்லும் போது கைகளை கழுவ அறிவுறுத்த வேண்டும். அனைத்து தொழிற்சாலைகளிலும் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள், அதிகாரிகள், அலுவலர்கள், தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் நிர்வாகிகள், மேலாளர்கள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story