கயத்தாறு அருகே கார் மோதி புள்ளி மான் உயிர் இழந்தது
கயத்தாறு அருகே கார் மோதி புள்ளி மான் ஒன்று உயிர் இழந்தது.
கயத்தாறு,
கயத்தாறு அருகே கார் மோதி புள்ளி மான் ஒன்று உயிர் இழந்தது.
புள்ளிமான்
கயத்தாறு அருகே அரசன்குளம் பகுதியில் ஒரு புள்ளிமான் நெல்லை/ மதுரை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றது. அப்போது நெல்லையில் இருந்து மதுரை நோக்கி சென்ற ஒரு கார், எதிர்பாராதவிதமாக மான் மீது மோதியது. இதில் அந்த மான் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தது.
இதுகுறித்து உடனடியாக கோவில்பட்டி சகர வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறை அதிகாரி சிவராம் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் அந்த மானின் உடலை கைப்பற்றி கயத்தாறு கால்நடை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தண்ணீர் தேடி....
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும் போது, தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் இந்த புள்ளி மான் தண்ணீர் தேடி ஊருக்குள் செல்ல முயன்ற போது விபத்தில் சிக்கி உயிர் இழந்துள்ளது. இந்த மானுக்கு 3 வயது இருக்கும் என்று கூறினார்கள். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு பின்னர் அந்த மானின் உடல் கயத்தாறு அருகே உள்ள குருமலை காட்டு பகுதியில் புதைக்கப்பட்டது.
Related Tags :
Next Story