நெல்லையப்பர் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.7 லட்சம்


நெல்லையப்பர் கோவிலில்  பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.7 லட்சம்
x
தினத்தந்தி 20 March 2020 4:00 AM IST (Updated: 19 March 2020 9:51 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையப்பர் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.7 லட்சம் ஆகும்.

நெல்லை, 

நெல்லையப்பர் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.7 லட்சம் ஆகும்.

உண்டியல் திறப்பு 

வரலாற்று சிறப்பு மிக்க நெல்லையப்பர் கோவிலுக்கு உள்ளூரில் மட்டும் அல்லாமல், வெளியூரில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். பக்தர்கள் கோவில் உண்டியல்களில் செலுத்தும் காணிக்கை 3 மாதத்துக்கு ஒரு முறை எண்ணப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28–ந்தேதி கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. தொடர்ந்து நேற்று கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.

கோவிலில் மொத்தம் 21 நிரந்தர உண்டியல்கள் உள்ளன. இந்த உண்டியல்கள் மைய மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது. நாகர்கோவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் ரத்தினவேல் பாண்டியன் தலைமையில், கோவில் ஆய்வாளர் கண்ணன், தக்கார் ராமலட்சுமி ஆகியோர் முன்னிலையில், உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணப்பட்டன.

ரூ.7 லட்சம் பக்தர்கள் காணிக்கை 

உண்டியலில் இருந்த காணிக்கைகளை கோவில் பணியாளர்கள், பக்தர்கள் எண்ணினர். மொத்தம் ரூ.7 லட்சத்து 4 ஆயிரத்து 982–யை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் இது தவிர 21 கிலோ 700 கிராம் எடையுள்ள பல மாற்று பொன் இனங்கள், 168 கிராம் எடையுள்ள பல மாற்று வெள்ளிகள், 15 வெளிநாட்டு பண நோட்டுகள் இருந்தன. இந்த பணம், நகைகள் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ராமராஜா, கண்காணிப்பாளர் கவிதா ஆகியோர் செய்து இருந்தனர்.

Next Story